Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Pattukkottai - 614601, தஞ்சாவூர் .
Arulmigu Mariamman Temple, Pattukkottai - 614601, Thanjavur District [TM014166]
×
Temple History

தல பெருமை

பரம்பொருள் ஒன்றுதான் எனினும் பல்வேறு அருட்செல்வம் செய்வதற்காக அப்பரம்பொருள் பல்வேறு உருவத்திரு மேனிகளை தாங்கியுள்ளது. உலகமக்களும் ஒவ்வொரு காரியத்திற்கெனவும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர். தொடங்கும் காரியம் விக்னம் இல்லாமல் முடிவதற்காக ஸ்ரீ விக்னேஸ்வரனை முதலில் வழிபடுகின்றனர். அதுபோல மழைபொழிய வேண்டும் என்பதற்காக ஒரு தெய்வத்தை வழிபடுகின்றனர். அத்தெய்வம் மாரி என அழைக்கப்படுகின்றது. மழையின்றி உலகம் இல்லை மாரியல்லாது காரியம் இல்லை. எனவே ஊர்தோறும் மாரியம்மனுக்கு கோவில் உண்டு. யார்கடன் இருந்தாலும் மாரி கடன் செலுத்த மக்கள் மறப்பதில்லை. ...