அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், Pullamangai, பசுபதிகோயில் - 614206, தஞ்சாவூர் .
Arulmigu Prammapurishwarar Temple, Pullamangai - 614206, Thanjavur District [TM014183]
×
Temple History
தல பெருமை
பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை ஐதிகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 16ஆவது சிவத்தலமாகும்.
இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே 5 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது. ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதிகோயில். கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. 1 இக்கோயிலுக்கு அருகே உள்ள மற்றொரு சிவன் கோயில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் ஆகும்.
ஊர்ப்பெயர் பண்டை நாளில் புள்ள மங்கை என்றும், கோயிற் பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி பசுபதி கோயில் என்று வழங்குகின்றது. புள்ளமங்கை என்றதற்கேற்ப...பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை ஐதிகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 16ஆவது சிவத்தலமாகும்.
இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே 5 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது. ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதிகோயில். கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. 1 இக்கோயிலுக்கு அருகே உள்ள மற்றொரு சிவன் கோயில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் ஆகும்.
ஊர்ப்பெயர் பண்டை நாளில் புள்ள மங்கை என்றும், கோயிற் பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி பசுபதி கோயில் என்று வழங்குகின்றது. புள்ளமங்கை என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் இருக்கின்றன.
குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் ஆலந்துறை என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.
அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.
பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.