தல பெருமை
ஆரம்பகாலத்தில் உஜ்சைனி மகாணம் என்று அழைக்கப்பட்ட பின்னர் மருவி உஜ்சினி என இவ்வூர் அழைக்கப்பட்டுவருகிறது. இராமபிரான் தனது சேனைகளோடு சீதாதேவியை தேடி வடக்கிலிருந்து தெற்கே சென்ற போது இவ்வூரில் தங்கி இறைவனை பூஜை செய்த பிறகே இராமேஸ்வரம் சென்றதாக செவி வழி செய்தியாக அறியப்படுகிறது. இச்செய்தி மூலம் இராமர் பூஜித்த தலம் என இவ்வூர் மக்களின் நம்பிக்கையாகும். உஞ்சினியே பிரபஞ்சத்தின் மூத்த உஞ்ஜவிருத்தி பிட்சா சக்தி தலமாகும்.