Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வேணுகோபால சுவாமி திருக்கோயில், Agarapettai - 613104, தஞ்சாவூர் .
Arulmigu Ekambareswarar And Venugopala Swamy Temple, Agarapettai - 613104, Thanjavur District [TM014217]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயில் கல்லணை செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ளது, இந்த பகுதியை கொக்கரசன் என்ற அரசன் பல வருடங்களுக்கு முன் ஆண்டு வந்ததால் கொக்கரசன் பேட்டை என்று பெயர் வழங்கி வந்ததாக வழிவழியாக வந்த தகவல் மூலம் தெரிய வருகிறது. இவ்வூரில் 1962க்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது அப்பகுதி மக்கள் கோவிலில் பலர் தஞ்சம் புகுந்தனர், அச்சமயத்தில் இத்தலத்தின வேணுகோபால சுவாமி மகிமையால் பெருடவெள்ளத்தை தடுத்து திசை திருப்பிவிட்டதாக இப்பகுதி மக்களால் இன்றளவும் நம்பப்படுகிறது. மேலும் இத்திருக்கோயில் புராதான பழமைமிக்க திருத்தலம் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.