தல வரலாறு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா திருச்செங்காட்டாங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு இத்திருக்கோயிலில் பின்பற்ற படுகிறது .பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி மகன் வேலைக்காரி ஆகியோருக்கும் அருள்புரிந்த தலம்.அதனை போன்று இத்திருக்கோயிலில் சித்திரை பரணி நட்சரத்தில் அமுது படையல் மற்றும் புஷ்ப பல்லக்கு வருடந்தோறும் நடைபெறும் இந்த திருவிழாவில் அமுது படையல் அன்று பிள்ளைக்காரி உற்சவத்தில் திருமணமான தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி கலந்துகொள்வர் .