தல பெருமை
இ த்திருக்கோயில் யானை ஏறாவன்னம் அமைக்கப்பட்ட மாடக்கோயில் ஆகும். திருவிக்கரம சோழ ராஜாவால் போற்றி பாதுகாக்கப்பட்டது. மகாவிஷ்ணு தன் பெயரில் இறைவனை வழிபட்டு இன்புற்ற தலம் ஆதலால் இவ்வூர் அச்சுதமங்கலம் என்று அழைக்கப்படுகிறது . இவ்வாலயம் ஸ்ரீகண்ட சம்பு சாதுவால் ஆகமப்படி பிரதஷ்டை செய்யப்பட்ட திருத்தலமாகும். ஸ்வாமிக்கு இடப்புறம் அம்பாளுக்கு தனி கோயில் உள்ளது . இவ்வமைப்பு திருமணக்கோல அமைப்பினை வெளிப்படுத்துகிறது.