துவாபரயுக முடிவில் கோபில கோபிரளர் எனும் இரண்டு ரிஷிகள் துவாரகைக்கு சென்று கண்ணனை கண்ணராக் கண்டு அவன் லீலைகளை சேவித்து ஆனந்தமுற எண்ணி வடதிசையை நோக்கி யாத்திரை செய்து தியானத்திலமர்ந்து பல வருடங்கள் கழிந்து கண்விழித்து நாரதரை கண்டு கண்ணன் தன் அவதார லட்சியங்களை பூர்த்தி செய்துவிட்டு ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து விட்டார் என்று சொல்லிஅருளியதைக் கேட்ட ரிஷிகள் மூர்ச்சையாகி வீழ்ந்தனர் .பின் நாரதர் அருளால் செண்பகாரண்யம் எனும் தலம் வந்து தவம் செய்து கண்ணனை சேவித்து மகிழ்ந்தார்கள் இப்படி கண்ணன் தரிசனம் பெற்ற மகரிஷிகள் ...துவாபரயுக முடிவில் கோபில கோபிரளர் எனும் இரண்டு ரிஷிகள் துவாரகைக்கு சென்று கண்ணனை கண்ணராக் கண்டு அவன் லீலைகளை சேவித்து ஆனந்தமுற எண்ணி வடதிசையை நோக்கி யாத்திரை செய்து தியானத்திலமர்ந்து பல வருடங்கள் கழிந்து கண்விழித்து நாரதரை கண்டு கண்ணன் தன் அவதார லட்சியங்களை பூர்த்தி செய்துவிட்டு ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து விட்டார் என்று சொல்லிஅருளியதைக் கேட்ட ரிஷிகள் மூர்ச்சையாகி வீழ்ந்தனர் .பின் நாரதர் அருளால் செண்பகாரண்யம் எனும் தலம் வந்து தவம் செய்து கண்ணனை சேவித்து மகிழ்ந்தார்கள் இப்படி கண்ணன் தரிசனம் பெற்ற மகரிஷிகள் இத்தலத்தை விட்டகல மனமில்லாதவர்களாய் பாமணி நதியின் மேற்கில் கோபிநாத தீர்த்தக்கரையில் பர்னசாலை அமைத்து வாழ்ந்து வரலாயினர் ஒரு நாள் முன் யுகத்தில் நடந்த வடமதுரைக் கண்ணனது முப்பத்திரெண்டு லீலைகளைத் தரிசிக்க நாம் தென் மதுரை முக்கண்ணனான சிவபெருமான் செய்தருளிய அறுபத்ததி நான்கு திருவிளையாடல்களையும் தவம் செய்துஇத்தலத்தில் தரிசித்து மகிழ வேண்டும் என எண்ணி பாமணி நதிக்கு கீழ்க்கரையில் சிவலிங்கம் ஸ்தபாபனம் செய்து சிவபுஜை செய்து வருவராயினர்.
சிவபெருமான் இவர்களது தவத்திற்கிரங்கி மூல லிங்கத்திலிருந்து மீனாட்சி அம்மையாரோடு ரிஷப வாகனத்திலே காட்சி தந்தருளி அறுபத்தி நான்கு திருவிளையாடளையும் செய்து அருளினார் . பிறகு இவ்விடத்தில் மகரிஷிகள் ஆலயங்கட்டி பூஜை முதலியன நடத்தி பிரம்மோற்சவமும் செய்து மகிழ்ந்தனர் ஆகையால் இத்தலம் சிவபெருமான் மீனாட்சி அம்மனோடு ரிஷப வாகனத்தில் காட்சி தந்த மிக சிறப்பு பெற்ற ஸ்தலமாகும் பிற்காலத்தில் சோழ மன்னர் இத்தலத்தின் மகிமையை அறிந்து திருக்கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார்