அருள்மிகு ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருமக்கோட்டை - 614017, தி௫வாரூர் .
Arulmigu Ganapurishwarar Temple, Thirummakkottai - 614017, Thiruvarur District [TM014309]
×
Temple History
தல வரலாறு
திருமக்கோட்டை - மன்னார்குடிக்கு தெற்கே 16 கி.மீ தொலைவில் உள்ளது. திருமெய்ஞானபுரம், ஞானபுரீசுவரம், பாரிஜதவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இராமபிரானின் குலகுருவான வசிஷ்டர் அவருக்கு ஞான உபதேசம் செய்வித்ததால் திருமெய்ஞானபுரம் என்று பெயர் வந்தது.
பதினாறு கணபதிகள் வீற்றிருப்பதால் ஷோடச கணபதி தலம் எனும் தனிச்சிறப்பு கொண்டது. ஞான தீர்த்தம் உள்பட ஐந்திற்கும் மேற்பட்ட புனித தீர்த்தங்கள் உள்ளன. தலமரம் பாரிஜாதம். திருக்கோயிலின் முன்னே உள்ளது ஞானதீர்த்தம். மடப்பள்ளி அருகே வசிஷ்ட முனிவரின் சிலை வடக்கு நோக்கி...திருமக்கோட்டை - மன்னார்குடிக்கு தெற்கே 16 கி.மீ தொலைவில் உள்ளது. திருமெய்ஞானபுரம், ஞானபுரீசுவரம், பாரிஜதவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இராமபிரானின் குலகுருவான வசிஷ்டர் அவருக்கு ஞான உபதேசம் செய்வித்ததால் திருமெய்ஞானபுரம் என்று பெயர் வந்தது.
பதினாறு கணபதிகள் வீற்றிருப்பதால் ஷோடச கணபதி தலம் எனும் தனிச்சிறப்பு கொண்டது. ஞான தீர்த்தம் உள்பட ஐந்திற்கும் மேற்பட்ட புனித தீர்த்தங்கள் உள்ளன. தலமரம் பாரிஜாதம். திருக்கோயிலின் முன்னே உள்ளது ஞானதீர்த்தம். மடப்பள்ளி அருகே வசிஷ்ட முனிவரின் சிலை வடக்கு நோக்கி உள்ளது.
பெருநோய் பிரித்த புனித தீர்த்தமாக விளங்குகிறது ஞானதீர்த்தம். கிருதசேகர சோழமன்னனைப் பிடித்திருந்த குஷ்ட நோய் அவன் இக்குளத்தில் நீராடியதும் மறைந்ததாம்.
படித்துறையில் பிரம்ம தண்டம் என்று அழைக்கப்படும் கல்தூண் உச்சியில் நந்திதேவரும் கீழே திருக்கோயிலை நோக்கி கும்பிடும் கிருதசேகர சோழன் உருவமும் அதன் அருகில் இராமர் பாதமும் தலவரலாற்றின் சின்னங்களாகத் திகழ்கின்றன.
திருமெய்ஞானமுடையார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பெரியநாயகி தெற்கு நோக்கிய சந்நிதியில் உள்ளார். மகா மண்டபத்தில் மிளகு செட்டியார் திருஉருவம், மிளகு பொதி பயறு ஆகி, மீண்டும் மிளகு பொதியானதற்கு சாட்சியம் கூறுகிறது. அதன் நினைவாக அர்த்தஜாமத்தில் மிளகு சாதமே நெய்வேத்யம்.
தற்போது இந்த ஆலயம் திருமக்கோட்டை அருள்மிகு ரெங்கநாதப் பெருமாள் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது, இங்கு பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் அருள்பாலிக்கிறார்.