தல பெருமை

இறைவன் ஸ்ரீபிரம்மாவிற்கு ஏற்பட்டுள்ள சாப தோஷத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்தலத்திற்கு வந்திருந்து பூஜை செய்து வழிபட்டத்தின் விளைவாக இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என பெயர் பெற்ற தலமாக அழைக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீ நாகராஜன் இத்தலத்தில் இருந்து கொண்டு ஸ்ரீநந்திகேஸ்வரர் அருகிலேயே ஒரு பேழையில் குடிக்கொண்டு இறைவனை வழிபட்டதன் காரணமாக இத்தலத்திற்கு பேழைக்குடி எனவும் அது மறுவி போழக்குடி எனவும் பின்னர் இத்தலம் புகழ்வாய்ந்த குடியாதலால் புகழக்குடி எனவும் அழைக்கப்படுகிறது.