Arulmigu Pasupatheeswarar Temple, Avoor - 612701, Thiruvarur District [TM014433]
×
Temple History
தல வரலாறு
மிகவும் பழமையான இக்கோவில் பாபநாச இரெயில் நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 6கீ.மீ தூரத்திலும், வலங்கைமான் கோவிந்த்குடி மார்க சாலையில் மேற்கே 8கீ.மீ தூரத்திலும் ஊரின் நடுவே அமையப்பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் நாயனரால் பாடப்பெற்றுள்ளது. பாடல்பெற்ற 274 தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 27வது தலமாக அமையப்பெற்றுள்ளது. வசிஷ்டரால் ஏற்பட்ட சாபம் நீங்க காமதேனு இத்தல இறைவனை வழிப்பட்டு சாபவிமோசனம் பெற்றதால் இறைவனுக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் இத்தல இறைவனை தசரதர், வசிஷ்டர் முதலானோர் பூசை செய்து வழிப்பட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக காமதேனு, வசிஷ்டர், தசரதர் பூசை செய்வதுபோல் ஓரேக்கல்லில் வடிவமைக்கப்பட்ட சிற்பமானது காணப்படுகிறது. அம்மன் சன்னதி மண்டபத்தில் பஞ்சபைரவர் சேர்ந்தார்போல் காட்சியளிகின்றனர். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருகளுக்கு சிறப்பு பூசை...மிகவும் பழமையான இக்கோவில் பாபநாச இரெயில் நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 6கீ.மீ தூரத்திலும், வலங்கைமான் கோவிந்த்குடி மார்க சாலையில் மேற்கே 8கீ.மீ தூரத்திலும் ஊரின் நடுவே அமையப்பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் நாயனரால் பாடப்பெற்றுள்ளது. பாடல்பெற்ற 274 தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 27வது தலமாக அமையப்பெற்றுள்ளது. வசிஷ்டரால் ஏற்பட்ட சாபம் நீங்க காமதேனு இத்தல இறைவனை வழிப்பட்டு சாபவிமோசனம் பெற்றதால் இறைவனுக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் இத்தல இறைவனை தசரதர், வசிஷ்டர் முதலானோர் பூசை செய்து வழிப்பட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக காமதேனு, வசிஷ்டர், தசரதர் பூசை செய்வதுபோல் ஓரேக்கல்லில் வடிவமைக்கப்பட்ட சிற்பமானது காணப்படுகிறது. அம்மன் சன்னதி மண்டபத்தில் பஞ்சபைரவர் சேர்ந்தார்போல் காட்சியளிகின்றனர். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருகளுக்கு சிறப்பு பூசை நடத்தப்பெறுகின்றது. எனவே இக்கோவில் மக்களால் பஞ்ச பைரவர பரிகார தலம் என்று நம்பப்படுகிறது..