அருள்மிகு காளிங்கநர்த்தன பெருமாள் திருக்கோயில், ஆவூர் - 612701, தி௫வாரூர் .
Arulmigu Kalinganarthana Perumal Temple, Avoor - 612701, Thiruvarur District [TM014435]
×
Temple History
தல வரலாறு
திருக்கோவில் மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வேத நாராயண பெருமாள் ஆவார். இத்திருக்கோவில் தொட்டியிலிருந்து காளிங்கநர்த்த பெருமாள் பஞ்சலோகமாக இருந்ததாக அதன் பின்னர் இத்திருக்கோவில் புகழ் பெற்றதாகவும். கிருஷ்ணரின் தெய்வீக மாடுகளான நந்தினி மற்றும் காமதேனுவின் முன்னால் கிருஷ்ணர் நிகழ்த்திய காளிங்கநர்த்தத்திலிருக்கு நாரத முனிவர் அளித்தததாகவும் நாரத முனிவர் கிருஷ்ணரிடம் நடன தோரணையில் கிராமத்தில் தங்கி பக்தர்களை ஆசீர்வதிக்குமாறு பிராத்தனை செய்தாகவும் ஆகவே கிருஷ்ணர் ஊத்துக்காடு நடனமாடும் தோரணியல் காளிங்கநர்த்தனமாக இருத்ததாகவும் இத்திருக்கோவில் வரலாறு கூறுகிறது.திருக்கோவில் மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வேத நாராயண பெருமாள் ஆவார். இத்திருக்கோவில் தொட்டியிலிருந்து காளிங்கநர்த்த பெருமாள் பஞ்சலோகமாக இருந்ததாக அதன் பின்னர் இத்திருக்கோவில் புகழ் பெற்றதாகவும். கிருஷ்ணரின் தெய்வீக மாடுகளான நந்தினி மற்றும் காமதேனுவின் முன்னால் கிருஷ்ணர் நிகழ்த்திய காளிங்கநர்த்தத்திலிருக்கு நாரத முனிவர் அளித்தததாகவும் நாரத முனிவர் கிருஷ்ணரிடம் நடன தோரணையில் கிராமத்தில் தங்கி பக்தர்களை ஆசீர்வதிக்குமாறு பிராத்தனை செய்தாகவும் ஆகவே கிருஷ்ணர் ஊத்துக்காடு நடனமாடும் தோரணியல் காளிங்கநர்த்தனமாக இருத்ததாகவும் இத்திருக்கோவில் வரலாறு கூறுகிறது.
தல பெருமை
ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கி மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு வரலாம். திருக்கருக்காவூர் ஆவூர் இடையே உள்ளது இக்கிராமம் . தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக இவ்வூர் வரலாம். மெயின் ரோட்டில் அறிவிப்பு பலகை இருக்கும். நேரே வந்தால் கோவில் சன்னதியை அடையலாம்.
சின்னஞ்சிறு கோவில் தான். ஆனால் அழகாக இருக்கிறது. கோபுரம் ஆதிசேஷனுடன் தொடர்புடையதாக சொல்கிறார்கள்.
மூலவர் வேத நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். தனிச்சன்னதியில் மகாலக்ஷ்மி தாயார் வீற்றிருகிறார். கோபுர வாசலில் நடனம் செய்யும் விநாயக பெருமான் குதூஹலமாகக் குதித்தாடுகிறார். கோவில் சுத்தமாக புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. தற்போது ஆலய திருப்பணி நடந்து கொண்டிருக்கின்றது.
கோவிலின் பழமை...ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கி மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு வரலாம். திருக்கருக்காவூர் ஆவூர் இடையே உள்ளது இக்கிராமம் . தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக இவ்வூர் வரலாம். மெயின் ரோட்டில் அறிவிப்பு பலகை இருக்கும். நேரே வந்தால் கோவில் சன்னதியை அடையலாம்.
சின்னஞ்சிறு கோவில் தான். ஆனால் அழகாக இருக்கிறது. கோபுரம் ஆதிசேஷனுடன் தொடர்புடையதாக சொல்கிறார்கள்.
மூலவர் வேத நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். தனிச்சன்னதியில் மகாலக்ஷ்மி தாயார் வீற்றிருகிறார். கோபுர வாசலில் நடனம் செய்யும் விநாயக பெருமான் குதூஹலமாகக் குதித்தாடுகிறார். கோவில் சுத்தமாக புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. தற்போது ஆலய திருப்பணி நடந்து கொண்டிருக்கின்றது.
கோவிலின் பழமை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இத்திருக்கோவிலில் வேத நாராயண பெருமாள் பிரதான மூர்த்தியாக எழுந்தருளி பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவில் மிகச் சிறியதாக இருந்தது. பின்பு கண்ணன் வந்த பிறகு நலம் கொண்ட சோழனால் கோவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று கோவில் விஸ்தாரமாக்கப்பட்டது. ஆக இந்த சந்நிதியை விரிவாக்கிய பெருமை நலம் கொண்ட சோழனையே சாரும்.
விக்கிரக அழகு ஊத்துக்காடு கோவிலில் காளிங்கனின் சிரத்தின் மீது இடது காலை ஊன்றி, வலது கையில் அபயஹஸ்தத்துடன் தரிசனம் கொடுக்கும் கண்ணனின் திருவுருவத்தைக் காணப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மொழுமொழுவென்ற கால்களும் பளபளவென்ற கன்னங்களும், கையை நீட்டியிருக்கும் லாவகமும், தூக்கிக் கட்டிய கொண்டையும், சுருண்டு சுருண்டு நெற்றி வரைத் தொங்கும் மோதிரச் சுருட்டையான கேசமும், பாதங்களின் பிஞ்சு விரல்களும் மாயப் புன்னகையுமான நர்த்தனமாடுகிற கண்ணனின் வடிவத்தைப் பார்த்தவுடன் சிற்பியால் செய்யப்படாத விக்கிரகம் என்றே தெரிகின்றது.