Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், ஹரித்துவாரமங்களம் - 612802, தி௫வாரூர் .
Arulmigu Pathaleshwarar Temple, Haridwaramangalam - 612802, Thiruvarur District [TM014436]
×
Temple History

தல வரலாறு

தஞ்சை-திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்மாப்பேட்டைக்கு வடகிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு அருகில் உள்ள மற்றொரு தலம் அவளிவநல்லூர் (2.கி.மீ) தொலைவில் உள்ளது. வெண்ணாற்றின் வடகரைப் பகுதியில் அமைந்த தேவாரத் திருத்தலம்- பஞ்ச ஆரண்யத் தலங்களில் உச்சிக் காலத்தில் வழிபட வேண்டிய மூன்றாவது தலமாகும். பஞ்சவன அசஷத்திரங்களுள் மூன்றாவதான இத்திருத்தலம் வன்னி வனம் எனப்படுகிறது. சிவபெருமானின் திருப்பாதங்களைக்காண (ஹரி) திருமால் வராஹ அவதாரமெடுத்து பூமியை துளைத்துச் சென்றதால் ஹரித்துவாரமங்கலம் என இத்தலம் பெயர் பெற்றது. (ஹரி துவார மங்கலம்) எனவே இத்தலம் தென்னாற்காடு மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்துடனும், வடாற்காடு மாவட்டம் திருவருணையுடனும் இணைத்து பேசப்படுகிறது. வராஹ அவதாரமெடுத்த விஷ்ணு சிவபெருமானின் திருவடிகளை தரிசிக்க சென்ற போது அத்திருவடிகள் பாதாளம் வரை தொட்டு நின்றதால் இறைவனை மக்கள்...