Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நேமம் - 614715, தி௫வாரூர் .
Arulmigu Vethapureswarar Temple, Nemam - 614715, Thiruvarur District [TM014448]
×
Temple History

தல பெருமை

நேமம், அருள்மிகு வேதபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் சப்தரிஷிகளால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும். சிவபெருமானின் கட்டளைக்கு இனங்க ரிக், யசூர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்களை சப்தரிஷிகளால் போதிக்கப்பட்ட இடம். பின்பு ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்மந்தரால் மூன்றாம் திருமுறை பதினொன்றாம் பதிகத்தில் பாடல்பெற்ற தளம் ஆகும். ஆலய தேவாரம். நிறைவெண்டிங்கள் வாய்முக மாதபாட நீள்சடைக் குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான் இறைவண்டியாழ் செய்பைம் மொழிற்பழனஞ் சூழ்சிற்றேமத்தான் இறைவனென்றே யுககெலாம் ஏத்த நின்ற பெருமானே அம்பாள் துதி தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வ வடிவும்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பரென்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் பிராமி கடைகண்களே