தல வரலாறு
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் வால்மீகி வனமாக விளங்கிய காலத்தில் லவன் - குசன் இருவரும் இராமர் வழிபட்ட சிவபெருமானை எண்ணி ஒரு வேள்வி வளர்த்து வெற்றி பெற்றமையால் வேள்வியூர் எனப்பெயர் ஏற்பட்டு பிறவி மருவி வேளூர் என்றாயிற்று. சொர்ணபுரீசரும், சோமகுல நாயகியும், வழிபடும் பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் இடர்களை ஓட்டி இன்பம் விளையச் செய்கின்றனர்.