Screen Reader Access     A-AA+
அருள்மிகு நல்லமாரியம்மன் திருக்கோயில், தொழுதூர், தொழுதூர் - 614203, நாகப்பட்டினம் .
Arulmigu Nalla Mariyamman Temple, Tholuthur, Thozhuthur - 614203, Nagapattinam District [TM014460]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு நல்லாரியம்மன் திருக்கோயில் குலதெய்வ வழிபாட்டிற்கு சிறப்புடைய திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் தொழுதுார் கிராமத்தின் அண்டை கிராமமான வேளூர் கிராமத்தில் மண்பாண்ட பொருட்கள் வியபாரம் செய்ய வயல் வெளி பாதையாக சென்ற குசவர்களின் கூடையில் அம்மன் வந்ததாகவும், இக்கிராமத்தை அடைந்தவுடன் கூடை துாக்க முடியாமல் கீழே வைத்துவிட்டு சிறிது இளைப்பாரி கூடையை துாக்க முயன்ற போது கூடை மிகவும் எடை மிகுந்ததாக இருந்தது அதன் பிறகு நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன் என்று அம்மன் கூறியதாக இத்திருக்கோயிலின் வரலாறு கூறுகிது.