Screen Reader Access     A-AA+
அருள்மிகு பன்னகாபரமேஸ்வரசுவாமி திருக்கோயில், திருக்குவளை, மரச்சேரி - 614711, நாகப்பட்டினம் .
Arulmigu Bannagaparameswary Temple, Thirukkuvalai, Maraachery - 614711, Nagapattinam District [TM014557]
×
Temple History

தல வரலாறு

திருமுகத்தலை எனும் பெயரோடு கருவூர்த்தேவரால் திருவிசைப்பா பாடப் பெற்றதும், ஆதிசேடன் தனது குன்மநோயை இத்தலத்தில் இறைவன் அருளால் போக்கி கொண்டதான புகழ்பெற்றதும், சூரியன், அம்பாள் ஆகியோரால் வழிபடப் பெற்று சிறப்பு பெற்றதுமான இத்தலம் திருத்துறைப்பூண்டி வட்டம், பன்னத்தெரு கிராமத்தில் உள்ளது. இத்தலம் திருத்துறைப்பூண்டி சந்திப்பிலிருந்து 3 கல் தொலைவிலும், வேளாங்கன்னி - நாகை பைபாஸ் சாலையில் கொக்கலாடி பஸ் ஸ்டாப்பிலிருந்து வடக்கே 1 கி.மீ தொலைவிலும், திருவாரூர் சாலை. மணலி பேருந்து நிறுத்ததிலிருந்து கிழக்கே 4 கி.மீ தொலைவிலும் உள்ளது. சுவாமி பெயர் - பன்னகாபரமேஸ்வரி சுவாமி அம்பா் பெயர் - சாந்தநாயகி தலவிருட்சம் - புன்னை மரம்