Arulmigu Naduvatheeshwarar Temple, Nagapattinam - 611001, Nagapattinam District [TM014606]
×
Temple History
தல பெருமை
நாகப்பட்டினத்தில் இருக்கும் சிவராஜதானி எனும் சிறப்புப்பெற்ற 12 சிவாலயத்தில் மிகவும் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக அருள்மிகு நடுவதீஸ்வர சுவாமி திருக்கோயில் விளங்குகிறது.
எல்லா நகரங்களும் ஊழிக்காலத்தில் நீரில் மூழ்கி கிடந்தபொழுது அருள்மிகு செளந்தர நாயகி அம்மன் உடனுறை அருள்மிகு நடுவதீஸ்வரர் ஆலயம் மட்டும் நீரில் மூழ்காமல் இருப்பதை திருமால் மூலம் அறிந்த பிரம்மா இத்தலத்தின் பெருமையை உணர்ந்து ,இத்தல இறைவனை வணங்கி மீண்டும் இவ்வுலகை சமன் செய்து படைக்கும் ஆற்றலை பெற்றார்.
திருக்கடையூரில் சிவபெருமானை இருக கட்டிக்கொண்டிருந்தமார்க்கண்டயேர் மீது எமதர்மர் கால பாசத்தை வீச அது சிவபெருமான் மீது பட்டது. கோபமுற்ற சிவ பெருமான் எமனை வதைத்தார். தேவர்கள் வேண்டிக்கொண்டதால் எமனை உயிர்ப்பித்தார். மீண்டும் உயிர் பெற்ற எம தர்மர்...நாகப்பட்டினத்தில் இருக்கும் சிவராஜதானி எனும் சிறப்புப்பெற்ற 12 சிவாலயத்தில் மிகவும் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக அருள்மிகு நடுவதீஸ்வர சுவாமி திருக்கோயில் விளங்குகிறது.
எல்லா நகரங்களும் ஊழிக்காலத்தில் நீரில் மூழ்கி கிடந்தபொழுது அருள்மிகு செளந்தர நாயகி அம்மன் உடனுறை அருள்மிகு நடுவதீஸ்வரர் ஆலயம் மட்டும் நீரில் மூழ்காமல் இருப்பதை திருமால் மூலம் அறிந்த பிரம்மா இத்தலத்தின் பெருமையை உணர்ந்து ,இத்தல இறைவனை வணங்கி மீண்டும் இவ்வுலகை சமன் செய்து படைக்கும் ஆற்றலை பெற்றார்.
திருக்கடையூரில் சிவபெருமானை இருக கட்டிக்கொண்டிருந்தமார்க்கண்டயேர் மீது எமதர்மர் கால பாசத்தை வீச அது சிவபெருமான் மீது பட்டது. கோபமுற்ற சிவ பெருமான் எமனை வதைத்தார். தேவர்கள் வேண்டிக்கொண்டதால் எமனை உயிர்ப்பித்தார். மீண்டும் உயிர் பெற்ற எம தர்மர் சிவ பெருமான் கால பாசத்தை வீசியதால் ஏற்பட்ட சிவதோசம் நீங்க பல சிவ தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். சிவ தலங்கள் பல சென்று வழிபட்ட பொழுதிலும் தோசம் நீங்கவில்லை.
நாரத முனிவரின் அறிவுறுத்தலின் படி எமன் இத்திருக்கோயிலுக்கு வந்து அருள்மிகு நடுவதீஸ்வரரை வணங்கி சிவதோசம் நீங்க பெற்றார். இத்திருக்கோயிலில் மண்டபம் எழுப்பி திருக்குளம் அமைத்தார். எமனால் ஏற்படுத்தப்பட்ட திருக்குளம் எம் தீர்த்தக் குளம் என அழைக்கப்படுகிறது. எமதர்மர் மாசிமக பெருவிழா எடுத்து சமுத்திர தீர்த்தவாரியில் தேவர்களையும் கலந்துக் கொண்டு அருள் பெற செய்தார்.
அருள்மிகு செளந்தர நாயகி உடனுறை அருள்மிகு நடுவதீஸ்வரரை வேண்டி வணங்கினால் எமஉபாதை ஏற்படாமலிருக்கும் அருளை வழங்கினார்.