Screen Reader Access     A-AA+
அருள்மிகு அழகியநாதசாமி திருக்கோயில், நாகப்பட்டினம் - 611001, நாகப்பட்டினம் .
Arulmigu Azhagiyanathaswamy Temple, Nagapattinam - 611001, Nagapattinam District [TM014615]
×
Temple History

தல வரலாறு

திருமால் சிவபெருமானை வழிபட்டு தன் அழகை மீண்டும் திரும்பப் பெற்ற இந்த அழகிய நாதர் திருக்கோயில், சிவ ராஜதானி என போற்றப்படும் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக்கோயில் கருங்கல் திருப்பணிகள் ஆன ஒரு அழகிய கற்றளி ஆகும். ஆலய நுழைவாயில் மொட்டை கோபுரத்தில் விநாயகர், முருகர் ரிஷபத்தின் மீது அம்மையப்பர், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் அவரவர் வாகனத்தில் அமைந்த படி சுதை சிற்பம் அமைந்துள்ளது. மேலும் அதன் பின்புறத்தில் மகாவிஷ்ணு சிவபூஜை செய்யும் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை கடந்து நந்தியம் பெருமானே வணங்கி நேராக உள்ளே சென்றால் சற்று உயரமான கருவறையில் நீண்ட பானத்துடன் லிங்கத் திருமேனியாக...

தல பெருமை

இத்திருக்கோயில் சிவன் பெருமாளுக்கு அழகை தந்நதனால் அழகுசுந்தரம் என அழைக்கப்பட்டார். காலபோக்கில் அழகியநாதர் மருவி புழ்பெற்றது.