Screen Reader Access     A-AA+
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், திருப்பனையூர் - 609701, நாகப்பட்டினம் .
Arulmigu Sowndareswarar Temple, Thirupanaiyur - 609701, Nagapattinam District [TM014646]
×
Temple History

தல வரலாறு

கோவில்-திருப்பனையூர் தாலவனேசுவரம் மூலவர்-அழகியநாதா் செளந்தரேசுவரா் அம்மன்-பெரியநாயகி பிரஹந்தநாயகி திருக்குளம்-பராசரா் தீா்த்தம் அமிா்தபுஷ்கரணி மகாலட்சுமி தீா்த்தம் மரம் - பனைமிரம் வழிபட்டோா்- பராசரா், கரிகாணற்சோழன், முசுகுந்த சக்ரவா்த்தி மாகலட்சுமி தலத்திறைவன் - பனங்காட்டிறைவன் தாலவனேசுவரா் பழைய தமிழகத்தில் இறை வழிபாட்டுமுறை மரங்களின் அடியிலும் சோலைகளின் நடுவிலும் அமைக்கப்பட்டதாகும். இவ்வாறு தோன்றியதே ஆலங்காடு, ஆனைக்கா, நெல்லிக்கா, பழனம், பாதிரிப்புலியூா், பனந்தாள், பனையூா், வேணுவனம் ஆகிய தலங்களாகும். இக்காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது எனலாகும். இயற்கைச் சூழலில் தொடங்கிய இத்தகைய கோயில்கள்...

இலக்கிய பின்புலம்

தண்ணீா் வளம் நிறைந்த தண்செயசூழ்ற வள நாடாம் சோழநாட்டில் விண்வளம் சுருங்கிடினும் தன்வளம் பெருக்கும் பொன்னிளயெனும் காவிரியாற்றின் இருமருங்களும் எழுந்துள்ள சிவத்தலங்களுள் தேவாரப் பாடல் பெற்றதால் தென்கரைத் தலங்களாகத் தொகுக்கப்பெற்ற சிவத் தலங்கள் 127கும். அவற்றுள் தெய்வநலம் சிறந்தொளிரும் பழமைநிறைந்த இடமாக விளங்குவதே திருப்பணையூராகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பனையூரைப்பற்றிப் பாடிய பதிகத்தில் மாடமாளிகை கோபுரத்தோடு மண்டபம் வளரும் வளா்பொழில் பாடல்வண்டறையும் பழனத் திருப்பனையூா் என்ற பழைய பனையூரின் நிலையினை விளக்கியுள்ளாா். அக்காலத்தில் மாடமாளிகை கோபுரம் வானளாவி நிற்க இளமரப் பொழில்களும். நன்செய்களும் சூழ்ந்த நிலையில் இவ்வூா் விளங்கியது என்பதும் பாவிரி புலவா் பயிலும் பனையூா் என்பதனால் சிறந்த தமிழ்ப் புலவா்கள் பலா்இவ்வூரிதடல் வாழ்ந்திருந்தனா்என்பதும் மண்ணெலாம் முழுவதும் அதிா்தர மாடமாளிகை கோபுரத்தின்மேல் பண்ணி யாழ் முரலும்...