Arulmigu Raththinagireeshwara Swamy Temple, Thirumarugal - 609702, Nagapattinam District [TM014693]
×
Temple History
தல வரலாறு
அங்கிங்கெனாதபடி பரமாகாச ஒளிவடிவாய் நீக்கமற எங்கும் நிறைந்து சிவபெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் இப்பூவுலகில் அநேகம். மாதவம் செய்த தென்திசையாம் தமிழகத்தில் நால்வர் பெருமக்களால் பாடல் பெற்ற தலங்கள் மிகப்புனிதமானவைகளாகக் கருதப்படுகின்றன. தமிழ் வேதம் எனும் பன்னிரு திருமுறைகளின் சிறப்பு மற்றெந்த மொழிகளிலும் காணப்படாமையினாலேயே பாடல் பெற்ற தலங்கள் சிறப்புடையனவாகின்றன. அவற்றுள் காவிரித் தென்கரைத் தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகையாலும் சிறப்புடைய பதினெட்டு தலங்களில் முக்கியமானதும், கதலிவனம் என அழைக்கப்பட்டதுமான இத்திருத்தலத்தில், முன்னொரு காலத்தில் மருகல் என்ற ஒரு வகை வாழை வனமாக இருந்ததால் இத்தலத்திற்கு திருமருகல் என்ற பெயர் வரக் காரணமாயிற்று. இத்தலத்து விருட்சம் மருகல் இன வாழை...அங்கிங்கெனாதபடி பரமாகாச ஒளிவடிவாய் நீக்கமற எங்கும் நிறைந்து சிவபெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் இப்பூவுலகில் அநேகம். மாதவம் செய்த தென்திசையாம் தமிழகத்தில் நால்வர் பெருமக்களால் பாடல் பெற்ற தலங்கள் மிகப்புனிதமானவைகளாகக் கருதப்படுகின்றன. தமிழ் வேதம் எனும் பன்னிரு திருமுறைகளின் சிறப்பு மற்றெந்த மொழிகளிலும் காணப்படாமையினாலேயே பாடல் பெற்ற தலங்கள் சிறப்புடையனவாகின்றன. அவற்றுள் காவிரித் தென்கரைத் தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகையாலும் சிறப்புடைய பதினெட்டு தலங்களில் முக்கியமானதும், கதலிவனம் என அழைக்கப்பட்டதுமான இத்திருத்தலத்தில், முன்னொரு காலத்தில் மருகல் என்ற ஒரு வகை வாழை வனமாக இருந்ததால் இத்தலத்திற்கு திருமருகல் என்ற பெயர் வரக் காரணமாயிற்று. இத்தலத்து விருட்சம் மருகல் இன வாழை ஆகும்.
படைப்புத் தொழில் சிறப்புற இத்தலத்து இறைவனை பிரம்ம தேவன் வழிபட்டு பிரம்மோற்சவம் நடத்தியுள்ளார். விஷ்ணுவை விட்டு நீங்கா வரம்பெற இலக்குமிதேவி தன் பெயரில் குளம் அமைத்து வழிபட்டு மகாவிஷ்ணுவின் மார்பில் இடம் கொண்ட தலம். ஆதலால் இங்கு உள்ள தீர்த்தம் லக்ஷ்மி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மன அமைதி இழந்த யோகி பராசரர் மன அமைதி பெற்றதும், வசிஷ்ட புத்திரியின் இறந்த மகன் உயிர்ப்பிக்கப்பட்டதும் இத்தலத்தின் சிறப்பு.
தாமன் என்ற வணிகன் தன் பெண் மக்கள் எழுவரில் ஒருத்தியை தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு, பருவம் வந்த காலத்து ஒப்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்து வந்தான். அதனை உணர்ந்த ஏழாமவள் தன்னையும் பிறருக்கு மணம் செய்வித்து தன் தாய் மாமனை தந்தை ஏமாற்றுவார் என்றெண்ணி, தாய் தந்தைக்குத் தெரியாமல் தன் தாய் மாமனோடு வீட்டை விட்டு வெளியேறினாள். இருவரும் திருமருகலை அடைந்தபோது இரவு நேரம் ஆதலால் இங்கிருந்த ஒரு மண்டபத்தில் தங்கினர். அன்றிரவு செட்டிக் குமரனை வினைவயத்தால் ஒரு பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். செட்டிப்பெண் இதனை கண்டு இறைவனை நோக்கி முறையிட்டு புலம்பினாள், அப்போது தரிசனத்திற்காக இத்தலத்திற்கு வந்திருந்த திருஞானசம்பந்தப் பெருமானின் திருவுள்ளத்தில் செட்டிப்பெண்ணின் அழுகை ஒலி அருள் பிறக்கச் செய்யவே, சடையாயெனுமால் எனும் பதிகம் பாடி இறந்த வணிகனை உயிர்ப்பித்தருளினார். மதுரை சொக்கனாதப் பெருமான் திருக்கோயில் வன்னி மரத்தினை சாட்சியாகக் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும் என்ற மணமகனின் வேண்டுகோளை ஏற்று அங்குள்ள வன்னி மரத்தை திருமருகலில் தோன்றுமாறு அருளி செட்டிப்பெண் செட்டிப்பிள்ளை திருமணத்தை திருஞான சம்பந்தர் நடத்திவைத்தருளிய தலம். இந்த வன்னி மரத்தின் தொடர்பு மதுரையுடன் இருப்பதை ஆலவாய் புராணமும் கூறுகிறது, ஆகையால் இத்தலம் திருமண தடை நீங்கும் ஸ்தலமாக விளங்குகிறது.
குசகேது என்ற அரசன் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தபோது விவசாயத்திற்காக பூமியை உழச்செய்தான். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிடவே அவ்விடத்தை கவனமாகத் தோன்டியபோது மாணிக்கவண்ணம் ஒளிர சிவலிங்கம் இருப்பதை கண்டு தன் பிழையை எண்ணி அலறியழுது துன்புற்றான். அப்போது அங்கே ஆலயம் எழுப்பி தம்மை வழிபட மகிழ்வோம் என அசரீரியாக பெருமான் அருள, அவ்வரசன் ஆலயம் எழுப்பி வழிபட்டுள்ளான். பின்னொரு காலத்தில் அந்நகரில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் துயருற்றனர், அரசனும் சிவபெருமானிடத்தில் வேண்ட, அன்னாரின் வேண்டுகோளுக்கினங்கி பஞ்சம் நீங்கிட ரத்தினங்களும் நீருமாக மழை பெய்ததால், வறுமை நீங்கும் ஸ்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இதனால் இத்தலத்து மாணிக்கவண்ணனார் ஸ்ரீ இரத்தினகிரீசுவரர் என்றும் போற்றப்படுகிறார். பிற்காலத்தில் கோட்செங்கட் சோழ மன்னனால் யானையேறா மாடக்கோயிலாகக் கட்டப்பட்டுள்ளது. இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கும் சன்னதி சிறுமலையாக உயர்ந்துள்ளது.
இறைவியின் பெயர் வண்டுவார் குழலி, ஆமோதளநாயகி. விடம் தீர்த்த விநாயகர், முருகன், இலக்குமி மற்றும் சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் இருப்பது சிறப்பு. நிறைநீர் மருகல் என்ற திருவாசகத்திற்கு இணங்க பொன்னிநதி இவ்வூருக்கு தெற்கில் புத்தாராகவும், வடக்கில் முடிகொண்டான் ஆறாகவும் பாய்ந்து வளம் சுரப்பது காட்சிக்கும் இனிது. இத்தலத்தை வழிபடுவோருக்கு பஞ்சம் ஏற்படாது. செல்வ வளம் பெருகும், விஷஜந்துக்களால் ஏற்படும் நோய்கள் குணமாகும். இத்தலம் திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றது.
தல பெருமை
சோழநாட்டில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறந்து விளங்கும் பதினெட்டு ஸ்தலங்களில் முக்கியமானதும் காதலிவனம் என்று அழைக்கப்படும் திருமருகல். விழா நடத்தி பிரம்மா அருள் பெற்ற ஸ்தலம். பாம்பு தீண்டி இறந்த வணிகனை திருஞானசம்பந்தம் பதிகம் பாடி உயிர்ப்பித்து மணம் முடித்து வைத்ததால் இது திருமண தடை நீக்கும் ஸ்தலமாகும். மன அமைதி இழந்த யோகி பராசரர் அமைதி பெற்றதும். மன்னன் குசகேதுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பஞ்சம்நீக்கிட இரத்தின மழை பெய்வித்ததால் வறுமை நீங்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. மேலும் இத்திருக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருக்கோயில் ஆகும்.சோழநாட்டில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறந்து விளங்கும் பதினெட்டு ஸ்தலங்களில் முக்கியமானதும் காதலிவனம் என்று அழைக்கப்படும் திருமருகல். விழா நடத்தி பிரம்மா அருள் பெற்ற ஸ்தலம். பாம்பு தீண்டி இறந்த வணிகனை திருஞானசம்பந்தம் பதிகம் பாடி உயிர்ப்பித்து மணம் முடித்து வைத்ததால் இது திருமண தடை நீக்கும் ஸ்தலமாகும். மன அமைதி இழந்த யோகி பராசரர் அமைதி பெற்றதும். மன்னன் குசகேதுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பஞ்சம்நீக்கிட இரத்தின மழை பெய்வித்ததால் வறுமை நீங்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. மேலும் இத்திருக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருக்கோயில் ஆகும்.