Arulmigu Agastheeswara Swamy Temple, Voimedu - 614714, Nagapattinam District [TM014709]
×
Temple History
தல பெருமை
திருக்கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமா தேவியருக்கும் திருமணம் நடைபெற்ற போது உலகம் ஒரு பக்கம் சாய்ந்தது. அதனை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்கோடிக்கு செல்லுமாறு இறைவன் கட்டளையிட்டார். அப்போது அகத்திய முனிவர் இறைவன் இறைவி திருமணத்தை அடியேன் காண வேண்டாமா என வினவினார். அதற்கு இறைவன் நீ கோடியக்கரைக்கு செல் எங்களது திருமணக்கோலத்தை உமக்கு காட்டி அருள்புரிவோம் என்றார். உடனே உலகை சமன் செய்ய அகத்திய முனிவரும் தென்திசை நோக்கி புறப்பட்டார். அவ்வாறு செல்லும் போது வாய்மேடு என்னும் இவ்வூரில் அமைந்துள்ள இவ்வாலயத்தை வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது. அகத்திய முனிவர் வழிபட்டதால் இச்சிவன் அகஸ்தீஸ்வரஸ்வாமி என பெயர் பெற்றுள்ளார். ...திருக்கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமா தேவியருக்கும் திருமணம் நடைபெற்ற போது உலகம் ஒரு பக்கம் சாய்ந்தது. அதனை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்கோடிக்கு செல்லுமாறு இறைவன் கட்டளையிட்டார். அப்போது அகத்திய முனிவர் இறைவன் இறைவி திருமணத்தை அடியேன் காண வேண்டாமா என வினவினார். அதற்கு இறைவன் நீ கோடியக்கரைக்கு செல் எங்களது திருமணக்கோலத்தை உமக்கு காட்டி அருள்புரிவோம் என்றார். உடனே உலகை சமன் செய்ய அகத்திய முனிவரும் தென்திசை நோக்கி புறப்பட்டார். அவ்வாறு செல்லும் போது வாய்மேடு என்னும் இவ்வூரில் அமைந்துள்ள இவ்வாலயத்தை வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது. அகத்திய முனிவர் வழிபட்டதால் இச்சிவன் அகஸ்தீஸ்வரஸ்வாமி என பெயர் பெற்றுள்ளார். . . . .