Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேதபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், Thiriuvethikkudi - 613202, தஞ்சாவூர் .
Arulmigu Vethpureeswarar Temple, Thiriuvethikkudi - 613202, Thanjavur District [TM014854]
×
Temple History

தல வரலாறு

சோழ நாட்டுத் தேவாரத் தலங்கள் வரிசையில் காவிரித் தென்கரைத் தலங்களில் பதினான்காம் தலமாக விளங்குவது திருவேதிகுடியாகும். தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் உள்ள அட்டவீரட்டானங்களுள் ஒன்றான திருக்கண்டியூரிலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். தஞ்சை - கும்பகோணம் சாலையில் வெட்டாற்றுப் பாலம் அருகே திகழும் நடார் எனும் ஊரிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் 2 கி.மீ. பயணித்தும் இத்தலத்தை அடையலாம். திருஞானசம்பந்தப் பெருமாள், திருநாவுக்கரசர் ஆகிய இருமுது குரவர் பதிகம் பெற்ற இத்தலம் 1600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிவாலயத்தைப் பெற்ற சிறப்புடையது. திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்தஸ்தானக் கோயில்களுள் இதுவும் ஒன்று. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர் என்பதாகும். வாழைமடுநாதர் என்றும் ஆராவமுதுநாதர் என்றும் அவருக்குப்...