Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயல், சென்னை - 600062, சென்னை .
Arulmigu Masilmaneeswarar Temple, Thirumullaivoyal, Chennai - 600062, Chennai District [TM000015]
×
Temple History

தல வரலாறு

தொண்டை நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் ஓணன் வாணன் மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர். அவர்களின் அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்டி அடக்கி வைக்கும் நோக்கத்தோடு தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். வரும் வழியில் மன்னன் ஏறிவந்த யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் பிண்ணி பிணைந்தன யானை தன் காலை எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படவே மன்னன் யானையின்மேல் அமர்ந்தபடியே முல்லைக்கொடிகளை வெட்டினான். அந்த இடத்தில் இருந்த கொடிகள் வெட்டுப்பட்டு அறுந்தன அந்த இடத்திலிருந்து குருதி இரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவனின் திரு உருவாகிய இலிங்கத்தைக் கண்டான் தரையில் விழுந்து புரண்டான் வியர்த்துப் போனான் கண்ணில் நீர் பெருகி...