தல வரலாறு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், நெடுவாசல் கிராமத்தில் , அம்மாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் அருள்மிகு பருத்திச் செட்டி பிள்ளையார் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர்: அருள்மிகு விநாயகர் இத்திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மேலும், இத்திருக்கோயில் பற்றிய சுவரோவியங்களோ, கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை ஆகையால் வரலாறு மற்றும் புராணங்கள் சரிவர அறிய இயலவில்லை. இத்திருக்கோயில் 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.