தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், மகிமாலை கிராமத்தில் , அம்மாப்பேட்டை பேருந்து நிறுத்ததில் இருந்து 3 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: அருள்மிகு விநாயகர் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் தைப்பொங்கல் திருவிழா விமர்சையாக உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை