Screen Reader Access     A-AA+
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், - 613504, தஞ்சாவூர் .
Arulmigu Angalamman Temple, Saliamangalam - 613504, Thanjavur District [TM015087]
×
Temple History

தல வரலாறு

முன்பொரு காலத்தில் பிரம்மாவின் தலையை கொய்ததால் சிவபொருமானுக்கு பிரம்மகஸ்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தின் காரணமாக சிவபெருமான் பித்து பிடித்தது போல் புலோகத்தில் சுற்றி அன்னம், ஆகாரம், படுக்கை தூக்கம் எதுவும் இன்றி திரிந்தார். தனது கணவரின் நிலையை கண்ட அன்னை ஆதி பராசத்தி அவரை இந்நிலையில் இருந்து விடுவிக்க அங்காளம்மனாக மேல்மலையனூர் என்னும் ஊரில் விழுப்புரம் மாவட்டம் அருகில் அவதாரம் எடுத்தாள். சிவபெருமான் சங்கராபரணி ஆற்றுக் குறுக்கே நடந்து மேல்மலையனூர் வந்தடைந்தார். அங்கே மயானத்தில் மூன்று பிடி சாம்பல் சாப்பிட அவரது பித்தம், பசி நீங்குகிறது என இவ்வாறாக இந்து மத புராணம் விளக்குகிறது. மேலும், மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் அன்னைய்யே, இங்கு தஞ்சை , சாலியமங்கலத்தில் புற்றாக வீற்றிருந்து பின்பு பிற்கால...