தல வரலாறு
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் அருள்மிகு அனந்தபத்மநாப பெருமாள் திருக்கோயில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களுள் ஒன்று. இத்திருக்கோயில் செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது. சிவனுடைய ஆற்றலை சமன் செய்யும் பொருட்டு தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த சுற்றுவட்டார பகுதியில் பெரிய அளவிலான மூலவர் விக்கிரகாரம் உள்ளது.