தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கருப்பூர் கிராமத்தில் , பாபநாசம் இரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவி பெயர்: மாரியம்மன் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் மற்றும் ஆனி ஞாயிறு திருவிழா விமர்சையாக உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை