புராண பின்புலம்

உரேமச முனிவர் தவம் செய்து வழிபட்ட ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்திருத் தலத்தில் சிவ பெருமான் உரோமச முனிவருக்கு காட்சி தந்து வரம் பல தந்தருளினார். அத்திரி முனிவர் மற்றும் அனுசுயையின் மகனாகிய முகுந்தன், உரோமச முனிவரின் அறிவுறையின் படி இத்திருத் தலத்தில் சிவ பெருமானை வேண்டி தவமிருந்த போது காலபைரவர் வடிவில் சிவ பெருமான் காட்சி தந்து வரம் பல தந்தருளினார். இவ்வாறு வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அருளும் மூர்த்தியாய், அருள்மிகு வரமூர்த்தீஸ்வரராய் அருள்மிகு மரகதவல்லி தாயாருடன் சிவ பெருமான் இத்திருத் தலத்தில் அருள் பாலிக்கிறார்.