Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன வரதராஜப் பெருமாள் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை - 600029, சென்னை .
Arulmigu Prasanna Varatharaja Perumal Temple, Aminjikarai, Chennai - 600029, Chennai District [TM000158]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு பிரசன்ன வரதராஜப் பெருமாள் திருக்கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முற்பபட்டது. சென்னை , அமைந்தகரையில் கூவம் நதிகரையோரம் அமையப்பெற்றது. ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமன் தன்னுடைய குமாரர்களான லவன், குசன், இருவரையும் தேடிகொண்டு வரும்போது மிகவும் களைப்படைந்து நதிக்கரையோரம் அமர்ந்ததாகவும் அதனால் இவ்விடத்திற்ககு அமர்ந்தகரை என்றும் பின்பு அமிஞ்சிரை, அமைந்தகரை என்றும் மருவியதாக ஆன்றோர்கள் கூறுவர். பெருமாள் மூலவர் அருள்மிகு பிரசன்ன வரதராஜர் என்ற திருநாமம் தாங்கி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ பெருந்தேவித்தாயார் , ஸ்ரீ ஆண்டாள் , ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ராமானுஜருக்கு தனிச்சன்னதிகள் உள்ளது. இத்தலத்தில் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீ ஸ்ரீனிவாசர், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜர், அயோத்தி ஸ்ரீ ராமர்...