தல வரலாறு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடியில் பாதையில் ஆரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது பழமை வாய்ந்த அருள்மிகு ஹரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயில். சோழமன்னன் கரிகாலன் கட்டியதால் கோவிலுக்கு கரிகிருஷ்ண பெருமாள் கோயில் என்று பெயர் வைக்கப்பட்டது ஒரு கருத்து நிலவுகிறது. இங்குள்ள புற்றிலிருந்து ஹரிகிருஷ்ண மூலவர் தோன்றியதாகவும் பெயருக்கு ஏற்றார் போல இந்த கோயில் அமைந்துள்ள இடத்தை திருஆயர்பாடி என்று அழைக்கின்றனர். இந்த கோயிலில் சிறப்பு அம்சமாக ஆண்டாள் மற்றும் தாயார் சம்மதிகள் வழக்கத்திற்கு மாறாக்கு கருவறையின் இடது பக்கத்திலேயே அமைந்துள்ளன.