புராண பின்புலம்

இத்திருக்கோயில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கோயிலாகும், இந்த கோயில் மண்ணில் புதையுண்டு இருந்ததாகவும் பின்னர் வண்டிக்காரர் ஒருவர் கண்ணுக்கு சுயம்புவாக வெளிப்பட்டதாகவும் வரலாறு.சுமார் ஆறரை அடி உயர முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் முருகப்பெருமானின் வலப்புறத்தில் தெய்வானை இடம் பெற்றுள்ளார்.இந்த கோயிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி ஈசான மூலையில் அமர்ந்து அருள்பாலித்து வருவதால் ஆந்திராவிலிருந்து ஆண்டுதோறும் ஏராளமான முருக பக்தர்கள் நடைப்பயணமாகக் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வருகிறார்கள்.