Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருமுல்லீஸ்வரர் திருக்கோயில், எலியம்பேடு - 601204, திருவள்ளூர் .
Arulmigu Thirumulleswarar Temple, Ealiyambedu - 601204, Tiruvallur District [TM001617]
×
Temple History

புராண பின்புலம்

இத்திருக்கோயில் 18 நூற்றாண்டை சார்ந்தது .சில நூற்றாண்டுகளுக்கு முன் இவ்வாலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் அம்மாளையும் வேறொரு இடத்தில பிரதிஷ்டை செய்வதற்கு இவ்வூரின் வழியாக எடுத்து செல்லும்போது இரவு நேரமான காரணத்தினால் ஸ்வாமியையும், அம்மாளையும் இவ்விடத்தில் இறக்கி வைத்தனர். மறுநாள் காலையில் புறப்பட தயாராகும்போது சிவனையும், அம்மாளையும் எடுக்க முற்பட்டபோது எடுக்க முடியாமல் போனது. எனவே அவ்விரு மூர்த்திகளையும் இவ்விடத்திலேயே ப்பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினர்.