பிரம்மதேவர் சிவபிரானை வழிபட்டு அமிர்தகலசத்தைப் பெற்றனர். அதனால் கலசத்தியாகர் என்னம் பெயர் சுவாமிக்கு உண்டு. சிவபிரான் ஒருகால் இங்கே நடனம் செய்தருளினர் மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும், வசந்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்ற ஸ்தலம். சிவஞானபோதப் பேருரை எழுதிய ஸ்ரீ மத் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த செங்கழுநீர் விநாயகர் பிள்ளை தமிழும், கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதியும் இத்தலச் சிறப்பினைக் கவினுறக் காட்டுவன. சுவாமிகளின் அருமை மாணவர் தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணியத் தம்பிரான் அவர்கள் திருக்கலைசைக் கோவை, திருக்கலைசைச் சிலேடை வெண்பா, திருக்கலைசைச் சிதம்பரேசர் சந்நிதி முறை, திருகக்கலைசைச் சிதம்பரேசர் வண்ணம், திருக்கலைசைச் சிதம்பரேசர் பஞ்சரத்தினம், திருக்கலைசைச் சிவகாமியம்மை பஞ்சரத்தினம் திருக்கலைசைச் சிதம்பரேசர் பரணி, திருக்கலைசைச் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்...பிரம்மதேவர் சிவபிரானை வழிபட்டு அமிர்தகலசத்தைப் பெற்றனர். அதனால் கலசத்தியாகர் என்னம் பெயர் சுவாமிக்கு உண்டு. சிவபிரான் ஒருகால் இங்கே நடனம் செய்தருளினர் மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும், வசந்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்ற ஸ்தலம். சிவஞானபோதப் பேருரை எழுதிய ஸ்ரீ மத் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த செங்கழுநீர் விநாயகர் பிள்ளை தமிழும், கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதியும் இத்தலச் சிறப்பினைக் கவினுறக் காட்டுவன. சுவாமிகளின் அருமை மாணவர் தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணியத் தம்பிரான் அவர்கள் திருக்கலைசைக் கோவை, திருக்கலைசைச் சிலேடை வெண்பா, திருக்கலைசைச் சிதம்பரேசர் சந்நிதி முறை, திருகக்கலைசைச் சிதம்பரேசர் வண்ணம், திருக்கலைசைச் சிதம்பரேசர் பஞ்சரத்தினம், திருக்கலைசைச் சிவகாமியம்மை பஞ்சரத்தினம் திருக்கலைசைச் சிதம்பரேசர் பரணி, திருக்கலைசைச் சிவகாமியம்மை பஞ்சரத்தினம் திருக்கலைசைச் சிதம்பரேசர் பரணி, திருக்கலைசைச் சிதம்பரேசர் கட்டியம், ஆகியவை மூலம் இத்தலத்து அருள்வெள்ள பெருக்கினை எடுத்தியம்புகிறார். ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சிதம்பரேசர் மாலை என்னும் தமிழ்நயமிக்க நூலும் இத்தலத்துக்கு உண்டு.