Screen Reader Access     A-AA+
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில், மாங்காடு, சென்னை - 600122, காஞ்சிபுரம் .
Arulmigu Vaikunda Perumal Temple, Mangadu - 600122, Kancheepuram District [TM001650]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில் மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலின்அருகில் அமைந்துள்ள வைணவத்திருத்தலம் ஆகும். இத்திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா மற்றும் துணைஆணையர்/செயல்அலுவலர் ஆகியோர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் கிழக்கு திசையில் பிரதான சாலையை நோக்கி ஐந்து அடுக்குவிமானம் உள்ளது. திருக்கச்சிநம்பி - துறவிதத்துவஞானி மற்றும் ஸ்ரீராமானுஜாச்சாரியாருக்கு வழிகாட்டியாக அமர்ந்த கோலத்தில் சன்னதி உள்ளது. ஸ்ரீராமானுஜாச்சாரியார் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் ஸ்ரீ பூதேவி மற்றும் ஸ்ரீ தேவி ஆகியோருடன் ஸ்ரீகாமாட்சி அம்மனின் சகோதரர் என்ற வகையில் சிவபெருமான் மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மாங்காட்டிற்கு வருகை புரிந்தார். மாங்காட்டில் திருமணம் நடைபெறாத காரணத்தால் பகவான் விஷ்ணு ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு பரிசாக அளிக்க வேண்டிய...