அருள்மிகு மாந்தி அம்மன் திருக்கோயில், மாங்காடு - 600122, காஞ்சிபுரம் .
Arulmigu Manthi Amman Temple, Mangadu - 600122, Kancheepuram District [TM001656]
×
Temple History
தல வரலாறு
ஒரு காலத்தில் மாய அசுரன் என்ற அசுரன் பிரம்மா விஷ்ணு சிவன் இம்மூவரிடமும் சாகாவரம் பெற்றவன். அந்த அசுரன் இவ்வூர் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இக்கொடுமையை பொறுக்க முடியாமல் இவ்வூர் மக்கள் அருள்மிகு சோலை அம்மனிடம் முறையிட்டனர். சோலை அம்மன் நான் விஷ்ணு அவதாரமாக உள்ளதால் என்னால் அசுரனை அழிக்க முடியாது. எனவே என் தங்கையான மாந்தி அம்மனிடம் முறையிடுங்கள் என்றவுடன் மக்கள் மாந்தி அம்மனிடம் முறையிட்டார்கள். அம்முறையீட்டினை ஏற்று மாந்தி அம்மன் மாங்காட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
மாய அசுரன் உரு மாறும் சக்தி பெற்றவன். எந்த வடிவத்திலும் உரு மாறுபவன். மாந்தி அம்மனை பார்த்த அசுரன் காற்று, மரம், யானை, சிங்கம் என பல்வேறு வடிவங்களை எடுத்தான்....ஒரு காலத்தில் மாய அசுரன் என்ற அசுரன் பிரம்மா விஷ்ணு சிவன் இம்மூவரிடமும் சாகாவரம் பெற்றவன். அந்த அசுரன் இவ்வூர் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இக்கொடுமையை பொறுக்க முடியாமல் இவ்வூர் மக்கள் அருள்மிகு சோலை அம்மனிடம் முறையிட்டனர். சோலை அம்மன் நான் விஷ்ணு அவதாரமாக உள்ளதால் என்னால் அசுரனை அழிக்க முடியாது. எனவே என் தங்கையான மாந்தி அம்மனிடம் முறையிடுங்கள் என்றவுடன் மக்கள் மாந்தி அம்மனிடம் முறையிட்டார்கள். அம்முறையீட்டினை ஏற்று மாந்தி அம்மன் மாங்காட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
மாய அசுரன் உரு மாறும் சக்தி பெற்றவன். எந்த வடிவத்திலும் உரு மாறுபவன். மாந்தி அம்மனை பார்த்த அசுரன் காற்று, மரம், யானை, சிங்கம் என பல்வேறு வடிவங்களை எடுத்தான். திடீரென ஒரு குழந்தையாக உரு மாறினான். உடனே மாந்தி அம்மன் அக்குழந்தையின் அருகில் அமர்ந்து தன் வலக்கரத்தில் அணைத்து தூக்கி தன்னுடைய வலது காதில் இருந்த குண்டலத்தை கழற்றிவிட்டு அக்குழந்தையை தன் காதில் குண்டலமாகவும் அக்குழந்தைக்கு தன் காதை தொட்டிலாகவும் மாற்றி அவ்வசுரனிடம் இருந்து இவ்வூர் மக்களை காப்பாற்றினாள்.
இவ்வசுரனிடம் நடந்த போராட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமான நிலையில் இருந்ததால் இதனை கண்ட சோலை அம்மன் நீ அமைதியுற்று என் திருத்தலத்திலேயே தங்கி விடு. நான் பக்கத்திலுள்ள சோலையில் இருந்து விடுகிறேன் என்று கூறி இரு தெய்வங்களும் மக்களுக்கு அருள்புரியலாயினர்.