Screen Reader Access     A-AA+
அருள்மிகு வைகுண்டபெருமாள் திருக்கோயில், பெரிய காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Vaigunthaperumal Temple, Periya Kancheepuram - 631502, Kancheepuram District [TM001663]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் தலவரலாறு. காஞ்சிபுரம் நகர் அருள்மிகு வைகுண்டபெருமாள் திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த திருக்கோயிலாகும். வைணவத் திருத்தலங்களில் 56வது திவ்விய தேசமாகவும் காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் எனவும் வழங்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்திற்கு வட கிழக்கில் ரயில் நிலையத்திற்கு மேற்கில் அமைந்துள்ளது.வைகாணச ஆகமம்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இப்பெருமாள் மானுடர்க்கு வைகுண்ட பதவியினை அளிக்க வல்ல பெருமாள் என்பதால் வைகுண்ட பெருமாள் என்னும் பெயர் வழங்க எழுந்தருளியுள்ளார். நின்றான், கிடந்தான், இருந்தான் என மூன்று நிலைகளில் ஸ்ரீ முகந்த விமானத்தின் கீழ் பெருமாள் எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் முகப்பில் ராஜகோபுரத்துடன், மேற்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பல்லவ மன்னர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த சிற்பங்கள் மற்றும் சுதை...