தல வரலாறு
பிரம்மதேவன் காஞ்சியம்பதியில் செய்த வேள்வியை அழிப்பதற்கு சரஸ்வதி நதியுறுவங் கொண்டு வர சிவபெருமான் கட்டளைப்படி திருமால் சென்று அதனை தடுக்குங்கால் அந்நதி நடுராத்திரியில் காஞ்சியை அணுக திருமால் அவ்விருளை நீக்கி நதியின் வருகையை காண்பதற்கு விளக்கொளியை நின்று அத்திகிரிக்கு மேற்கில் ஆதீபிதேசம் என்னும் பெயரால் ஒரு சிவலிங்கத்தை தாபித்து பூசித்து தாம் விரும்பிய வரத்தை பெற்று அந்நதியை தடுத்து வேள்வியை பாதுகாத்து விளக்கொளி பெருமாள் என்னும் பெயருடன் ஆதிபதீஸ்வரர் திருமுன் தங்கினார் . இந்த ஆதிபதீஸ்வர பெருமானை வணங்கினவர்கள் வேண்டிய வரங்களை பெற்று முத்தியும் அடைவார்கள் .