Screen Reader Access     A-AA+
அருள்மிகு அத்தீஸ்வரர் திருக்கோயில், ஆட்டுப்புத்துார் கிராமம் - 631561, காஞ்சிபுரம் .
Arulmigu Atheeswarar Temple, Attupputhur - 631561, Kancheepuram District [TM001678]
×
Temple History

தல வரலாறு

கல்வியில் கரையிலா காஞ்சியில் இருந்து கிழக்கு திசையில் பெங்களுரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கிராமம் ஆட்டுப்புத்தூர். கிராமத்தில் இயற்கை கொஞ்சும் வயல்வெளியின் இடையில் ஏரிக்கரையின் கீழ் பல நெடுங்காலமாக இயற்கையின் அரவணைப்பில் வெட்டவெளியில் வீற்றிருந்த ஈசனும் நந்திதேவரும் மீட்டு 2012 ம் ஆண்டு திருக்கோயில் எழுப்பி ஈசனின் பாகமாய் அமிர்தவல்லி தாயாரை நிறுவி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பாய் பூசைகள் நடைபெற்று வருகிறது. மாத பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வருகிறது. மன கஷ்டங்களை தவிடுபொடியாக்கும் ஈசன் ஆழி சூழ் பூமியில் ஆதியாய் வீற்றிருக்கும் அத்தீஸ்வரர் சிறப்பாய் அருள்பாலிக்கிறார்.