தல வரலாறு
இத்திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு கைலாசநாதஸ்வாமி மிகவும் பிரார்த்தனை தெய்வமாகவும் பித்ரு தோஷம் சர்ப்ப தோஷம் போன்ற தோசை நிவர்திகளை அருள கூடியவர்.வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் திருக்குளத்தில் நீராடி கைலாசநாதர் மற்றும், பெரியநாயகி அம்மனை வளம் வந்து அன்று விரதம் இருந்து வழிபட்டால் பனிரெண்டு வாரங்களில் நினைத்த காரியம் கைகூடும்.இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் அதிகளவு வழிபடுகின்றனர்.