தல வரலாறு
இத்திருக்கோயில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோவில் திருப்பதி பெருமாளுக்கு இணை ஆனவர்.வசதியற்ற திருப்பதிக்கு செல்ல இயலாத பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை இத்திருக்கோயிலுக்கு வந்து செய்வது வழக்கம்.இத்துருக்கோயில் கிராமத்தில் உள்ள கால்நடைகள் இதர வளர்ப்பு உயிரினங்கள் ஏதேனும் நோய் வாய் பட்டாள் இத்துருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாளுக்கு நேர்த்தி கடன் செய்து குங்கும பிரசத்தினை நோய் வாய் பட்டவர்களுக்கு அளித்தால் நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை.புரட்டாசி சனியில் சுற்று புற கிராமங்களில் வீட்டில் விரதம் இருந்து பகவானை தரிசிப்பர்.