அருள்மிகு அறம்வளத்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Aram Valartheshwarar Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001685]
×
Temple History
தல பெருமை
உலக நாயகியாகிய அன்னை பார்வதி, கயிலையில் சிவபெருமானுடைய திருக்கண்களை மூடி, இழைத்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடி காஞ்சிபுரம் வந்து இறைவனை வழிபட்டாள் என்பது வரலாறு. அவ்வாறு காஞ்சிக்கு வந்த உமாதேவி காமாட்சி என்னும் பெயரில் இங்குக் கோயில் கொண்டிருக்கிறாள். அவ்வாறு உமையம்மை காஞ்சியில் தங்கி இறைவனை திருவேகம்பத்தில், மாவடியில் நாள்தோறும் பூசித்து வந்தபோது, உலக உயிர்கள் செழித்து வாழ்வதற்காக 32 அறங்களைச் செய்தாள் என்பது உலக வரலாறு. இதனை ஐயன் அளந்தபடி இருநாழி நெல் கொண்டு எண்ணான்கு அறம்வளர்த்தவள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் அம்பிகை காமாட்சிக்கு அறப்பெரும்செல்வி என்ற ஒரு அழகிய திருப்பெயரும் உண்டு.
இவ்வாறு அம்பிகை அறம் செய்து உலக உயிர்கள் தழைக்கச் செய்வதற்கு,...உலக நாயகியாகிய அன்னை பார்வதி, கயிலையில் சிவபெருமானுடைய திருக்கண்களை மூடி, இழைத்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடி காஞ்சிபுரம் வந்து இறைவனை வழிபட்டாள் என்பது வரலாறு. அவ்வாறு காஞ்சிக்கு வந்த உமாதேவி காமாட்சி என்னும் பெயரில் இங்குக் கோயில் கொண்டிருக்கிறாள். அவ்வாறு உமையம்மை காஞ்சியில் தங்கி இறைவனை திருவேகம்பத்தில், மாவடியில் நாள்தோறும் பூசித்து வந்தபோது, உலக உயிர்கள் செழித்து வாழ்வதற்காக 32 அறங்களைச் செய்தாள் என்பது உலக வரலாறு. இதனை ஐயன் அளந்தபடி இருநாழி நெல் கொண்டு எண்ணான்கு அறம்வளர்த்தவள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் அம்பிகை காமாட்சிக்கு அறப்பெரும்செல்வி என்ற ஒரு அழகிய திருப்பெயரும் உண்டு.
இவ்வாறு அம்பிகை அறம் செய்து உலக உயிர்கள் தழைக்கச் செய்வதற்கு, அறம் வளருவதற்கு, இறைவன் ஏகம்பன் அளித்த இருநாழி நெல்லே காரணமாக அமைந்தது. அம்பிகையின் அறம் வளருவதற்கு இறைவன் காரணமாக இருந்து நெல் அளித்ததால், அவர் அறத்தை வளர்த்ததால், அறம் வளத்தீஸ்வரர் எனப்படுகிறார்.