தல பெருமை
காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் தாமல் கிராமத்தில் இரு கோயில்கள் உள்ளன. வராகீஸ்வரர் சன்னதி மேற்கு நோக்கியும் கௌரி அம்மன் தனிக்கோயிலாகவும் உள்ளது. புராணவரலாறுகள் முழுவதுமாக தெரியவில்லை. காமிக ஆகமத்தின் அடிப்படையில் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தாமோதர பெருமாள் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியாகவும் பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜை நடைபெறும் தாயார் சன்னதி தனியாக உள்ளன . இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன