தல வரலாறு

தொன்மைச் சிறப்பு மிக்க மடவிளாகம் திருக்காமேஸ்வரர் திருக்கோயில் பல்லவ மன்னர் காலத்திலேயே வழிபாட்டில் இருந்து இருக்க வேண்டும் என்பதை இக்கோயில் வழிபாட்டில் இருக்கும் பெருமாள் சிற்பத் திருமேனி எடுத்துக் கூறுகிறது. பின்னர் கோயில் சோழர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதையும் வழியாடுகள் தொடர தானம் அளிக்கப்பட்டதும் கோயில் அதிட்டான பகுதியில் காணப்படும் கல்வெட்டு அச்செய்தியைக் கூறுகிறது. இக்கோயிலின் வழிபாட்டுக்கு உரிய பதஞ்சலி முனிவரின்அழகிய சிற்ப திருமேனியும் காணப்படுவது சிறப்பாகும். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை சிறப்பு உடையதாக விளங்குகிறது.