Arulmigu Venkatteeswarar Temple, Kadaperi - 603306, Chengalpattu District [TM001691]
×
Temple History
தல வரலாறு
திருவெண்காடு என்னும் இத்தலம் தொண்டை நாட்டைச் சார்ந்த மதுராந்தகம் ஒரு பகுதியான கடப்பேரியில் உள்ள திரு வெண்காடுடையார் கோயில் என்னும் கல்வெட்டு புகழ் பெற்றதாகும். இந்தக் கடப்பேரி என்பது சுவாமி பேரில் இனாமாகக்கப்பட்டிருந்ததது. ஏனைய தலங்களைப்போல் இந்த தலமும் மூர்த்தி தீர்த்தம் தலம் என்ற முப்பெருமைகளை உடையது இங்கு உழுந்தருளியுள்ள பெருமாள் ஆதியில் வெண் கொக்கு மந்தாரைகள் நிறைந்த காட்டிற்கு இடையில் உண்டான பெருமாள் ஆகையால் வெண்கார் என்று அழைக்கப்பெற்றார் போலும் கல்வெட்டுக்களும் அங்ஙனமே திரு வெண்காடுடைய மகாதேவர் என்ற குறிக்கின்றன. இப்பெருமாள் மிக மிக பழைமையானவர் என்பதை கண்டராதித்த சோழர் காலத்து கல்வெட்டுக்களே தெளிவாக விஙக்கும் இச்சோழரது காலம் கி.பி.949 -957 இவர்தாம் மதுரையை காப்பாற்றிப் பாண்டிய நாட்டைத் தன் ஆட்சியில்...திருவெண்காடு என்னும் இத்தலம் தொண்டை நாட்டைச் சார்ந்த மதுராந்தகம் ஒரு பகுதியான கடப்பேரியில் உள்ள திரு வெண்காடுடையார் கோயில் என்னும் கல்வெட்டு புகழ் பெற்றதாகும். இந்தக் கடப்பேரி என்பது சுவாமி பேரில் இனாமாகக்கப்பட்டிருந்ததது. ஏனைய தலங்களைப்போல் இந்த தலமும் மூர்த்தி தீர்த்தம் தலம் என்ற முப்பெருமைகளை உடையது இங்கு உழுந்தருளியுள்ள பெருமாள் ஆதியில் வெண் கொக்கு மந்தாரைகள் நிறைந்த காட்டிற்கு இடையில் உண்டான பெருமாள் ஆகையால் வெண்கார் என்று அழைக்கப்பெற்றார் போலும் கல்வெட்டுக்களும் அங்ஙனமே திரு வெண்காடுடைய மகாதேவர் என்ற குறிக்கின்றன. இப்பெருமாள் மிக மிக பழைமையானவர் என்பதை கண்டராதித்த சோழர் காலத்து கல்வெட்டுக்களே தெளிவாக விஙக்கும் இச்சோழரது காலம் கி.பி.949 -957 இவர்தாம் மதுரையை காப்பாற்றிப் பாண்டிய நாட்டைத் தன் ஆட்சியில் சேத்துக் கொண்டமையால் மதுராந்தகம் என்ற அழைக்கப்பெற்றார். இவர் பெயரால் உண்டானதே இம் மதுராந்தகம் என்னும் ஊர்.
இம் மதுராந்தகம் சதுர்வேதி மங்கலமாகும். அதாவது நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள் தங்கி வாழ்வதற்கு இடமாக விடப்பட்டது. இச்சதுர்வேதி மங்கலத்திற்கு மதுராந்தகம் சதுர்வேதி மங்கலம் என்பது கல்வெட்டுப் பெயராகும் இங்கு வாழ்நதவர் அனைவரும் கிரமவிதன் வாஜபேயாஜி சோமையாஜி என்னும் பெயர்களைத் தாங்கின அந்தனர் ஆவர் இச்சதுர்வேதி மங்கலத்தாரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு பேரவை இருந்துள்ளது. அதற்கு மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துப் பேரவை என்பது பெயர். இப்பேரவையர் செம்பியன் மாதேவி பெருமண்டபத்திற்கு கூடி ஓராட்சி நடைமுறைகளை கவனித்தனர் என்பது கல்வெட்டு வாசகம் செம்பியன் மாதேவி என்பர் கண்டராதித்த சோழரின் மனைவியார். இவர் முதல் இராசராச சோழனின் பாட்டியார். பல கோயில்களில் திருப்பணி செய்து புகழ் பெற்றவர். மதுராந்தகம் சதுர்வேதி மங்கலத்துப் பேரவையார் இத்திருவெண்காடு உடையார் கோவில் ஆட்சியிலும் பங்கு கொண்டிருந்தனர் என்பது கல்வெட்டு கண்ட உண்மையாகும். இத்திரு வெண்காடுடையார் கோவிலை சுற்றி மாட வீதிக்கு நிலம் ஒதுக்கினர் அவ்வீதிக்கு திரு வெண்காடுப்பெருந்தெரு என்னும் பெயரும் இட்டனர்.