தல வரலாறு
சந்தனக்கடை வாராவதி என்னுமிடத்தில் அரசு வேம்பு மரத்தின் கீழ் வடக்கு நோக்கி அமர்ந்து பிறப்பாக காட்சியளிக்கிறார். வடக்கு நோக்கிய விநாயகர் அரச மரத்தின் கீழ் இருப்பது மிகச்சிறப்பு அதிலும் அரசு வேம்பு என்னும் இரு மரங்களின் கீழ் அமர்ந்து அருள்பாலிப்பது மேலும் பல சிறப்புகள் கொண்டது. அரசு வேம்பு மரத்தின் கீழ் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால் விநாயகரை வலம் வந்தால் புத்திர பாக்கியம், தன, தான்ய அபிவிருத்தி, குடும்ப சந்தோஷம் மற்றும் ஆயுள் ஆரோக்கியம், திருமண தடை நீங்கும் சக்தி வாய்ந்தவர் அருள்மிகு திருக்கச்சியம்பதி விநாயகர். பூஜைகள் சிவ ஆகம அடிப்படையில் நடைபெறுகிறது. மாதந்தோறும் நடைபெறும் சங்கடஹரசதுர்த்தி மற்றும் வருட உற்சவமான விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.