அருள்மிகு ஓணகாந்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Onagantheshwarar Temple, Panjupettai, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001707]
×
Temple History
தல வரலாறு
தமிழகத்தின் ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஐந்து சிவாலயங்களில் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 235வது தேவாரத் தலம் ஆகும்.
காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சி தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இன்னரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது.
ஓணகாந்தேஸ்வரர் கோயிலிலும் இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ளது ஓணகாந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை.
இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார். சுந்தரர் எந்த தலத்தில் அருளிய பகுதி பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது.
எதை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. மூன்று நிலை ராஜகோபுரத்தை கண்டத்து உள்ளே சென்றால், தனித்தனி சன்னதிகளில் மூன்று லிங்கங்களும் மூன்று...தமிழகத்தின் ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஐந்து சிவாலயங்களில் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 235வது தேவாரத் தலம் ஆகும்.
காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சி தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இன்னரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது.
ஓணகாந்தேஸ்வரர் கோயிலிலும் இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ளது ஓணகாந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை.
இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார். சுந்தரர் எந்த தலத்தில் அருளிய பகுதி பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது.
எதை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. மூன்று நிலை ராஜகோபுரத்தை கண்டத்து உள்ளே சென்றால், தனித்தனி சன்னதிகளில் மூன்று லிங்கங்களும் மூன்று பிரதான சன்னதியில் உள்ளது. ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் ஆகியோர் இவர்கள்.
இது காண கிடைக்காத தரிசனம். அர்த்த மண்டபத்தில் சுந்தரரும், இறைவனின் திருப்பாத தரிசனமும் கிடைக்கிறது. இங்குள்ள வாயிருத்தாரி விநாயகர் கேட்ட வரம் அருளுபவர்.
இது தவிர மற்றோரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காத்து வைத்து கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுவதுண்டு.
ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாபதியான ஓணன், கந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தன ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான்.
இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களை பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதியில் வந்தார்.
மூன்று லிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன.
அசுரர்களுக்கு கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும். லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய போன், பொருள் வேண்டி சிவனை பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன், என்னும் சில பாடல்கள் பாடட்டுமே என தாமதம் செய்து பின்னர் அருகில் இருந்த புளிய மரம் ஒன்றை காட்டி மறைந்தார்.
அம்மரத்திலுள்ள காய்களெல்லாம் சுந்தரர் பதிகம் கேட்டு, பொன் காய்களாக மாறின. பின்னர் லிங்கங்களை வெளியே எடுத்து, கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினர்.