தல வரலாறு

குத்தம்பாக்கம் அருள்மிகு அழியாவர விநாயகர் வகையறா துறையாத்தம்மன் திருக்கோயில் கருவறை, மகா மண்டபம், முகமண்டபம் (6-தூண்கள்) ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. கோயில் முழுவதும் கருங்கல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் வீரராஜேந்திரன் 13-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1191) கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் அதிட்டானப் பகுதியில் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளன.