Arulmigu Maari Chinnamman Temple, Kadambadi - 603104, Chengalpattu District [TM001719]
×
Temple History
புராண பின்புலம்
புராண வரலாறு :
ஜமதக்னி முனிவரின் ஆணைக்கிணங்க பரசுராமர் தன் தாயின் தலையை கொய்துவிட்டு வருகிறார். தந்தை, பரசுராமரிடம் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள் எனக்கூறுகிறார். எனக்கு என் தாய் உயிருடன்...புராண வரலாறு :
ஜமதக்னி முனிவரின் ஆணைக்கிணங்க பரசுராமர் தன் தாயின் தலையை கொய்துவிட்டு வருகிறார். தந்தை, பரசுராமரிடம் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள் எனக்கூறுகிறார். எனக்கு என் தாய் உயிருடன் வேண்டும் என பரசுராமர் கேட்கிறார். வெட்டுண்ட தலை உடலோடு இணைய வேண்டுகிறார். ஜமதக்னி முனிவர் அவ்வாளே அருள பரசுராமர் இருட்டு வேளையில் இணைக்க, தனதாயின் தலையும் வேறொரு பெண்ணின் உடலும் இணைத்து உயிர் பெற்றிருந்தது.
ஆதிசக்தி எளிமையான எல்லா இடங்களிலும் அமர திருஉளம் கொண்டதால் நிகழ்ந்த மாற்றம் இது என்பதை பரசுராமர் உணர்ந்தார். சக்தியானவள் அனைத்து இடங்களிலும் எழுந்தருளி அமாந்தாள பெரியபாளையம், ஊத்துக்காடு, சமயபுரம், கண்ணபுரம், படவேடு, கொல்லனூர், வீராம்பட்டினம், ஊத்துக்காடு என்னும் ஏழு தலங்களில் மகாசக்தியாக அமர்ந்தாள். மேலும் மாமல்லபுரம் அருகே பசுமையான கிராமத்தின் புற்றாக அவதரித்தாள்.
புற்றுக்குள் இருந்த பாம்பை ஆடையாக்கி கொண்டாள் நாகத்தை குடையாக்கி கொண்டாள் காதுகளில் படமெடுத்து ஆடும் பாம்புகளை குண்டலங்களாக அணிந்து கொண்டாள். இரவு வேலைகளில் தேக்கு மரங்களில் பாம்புகளை கயிறாக்கி விளையாடினாள். வேப்பமர புற்றுக்குள் தான் இருப்பதாக சொல்லி வெளிப்படுத்தினார்.
ஊரிலே நிரந்தரமாகத் தங்கி வேண்டுதலகளை நிறைவேற்றுவேன். அலகு குத்தி அந்தரத்தில் ஆடினால் மகிழ்வேன் எனக்கூறினாள். மக்களும் அதனை பிரார்த்தானையாக நிறைவேற்றினார். எனவே தான் இவ்வூர் கடம்பாடி என அழைக்கப்பட்டது இவ்வூருக்கு அம்பாள் கடைசியாக வந்ததால் சின்னம்மன் என மக்கள் அழைத்துப் போற்றினர்.
அம்பாள் எழுந்தருளி அருள்புரியும் கருவறை சந்நிதி மிகவும் தொன்மையான கட்டடக்கலையுடன் காட்சி தருகிறது. சின்னம்மன் சந்நிதியில் ஆனந்த அதிர்வு அலைகள் நிறைந்து காணப்படுகிறது. கோயிலின் இடதுபுறம் பெரிய குளமும் அதில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவமும், பங்குனி உத்திரத்திருவிழா, ஆடிப்பூர தீ மிதி திருவிழா, நவராத்திரி திருவிழா, கார்த்திகை தீப திருவிழா, திருவாதிரை ஆருத்ரா திருவிழாவும் மிக விமரிசையாக நடைபெறுகிறது.
அருள்மிகு சின்னம்மன் கோயிலை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள மக்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் அருள்மிகு சின்னம்மன் சன்னதிக்கு வந்து அம்மன் தீர்த்தம் சாப்பிட்டால் அம்மை நோய் விரைவில் குணமாவதால் இவ்வம்மன் மாரிசின்னம்மன் என்று பெயர் பெற்று விளங்குகிறாள்.
மாரி சின்னம்மனை குலதெய்வமாகக் கொண்ட பல்லாயிரம் குடும்பங்கள் வந்து தரிசிக்கும் பக்தர்களின் வாழ்வை வளமாக்குகிறாள். தோஷங்களை நீக்குகிறாள். நாகதோஷ பிரார்த்தனை தலமாகவும், கவலைகளை தீர்ப்பவளாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அன்னயின் பெயர் சின்னம்மனாக இருந்தாலும் பக்தர்கள் வேண்டியதை அருள்வதில் இவள் மிகப் பெரியவள் மற்றும் முதன்மையானவள் ஆவாள். மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கும் கடம்பாடிக்கு செல்வோம். சின்னம்மன் தரிசித்து சீர்பல பெற்றிடுவோம்.
செங்கல்பட்டில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை இவ்வூரினை கிராம சுற்றுலா மையமாக அறிவித்துள்ளது மேலும் சிறப்பானதாக விளங்குகிறது.