Screen Reader Access     A-AA+
அருள்மிகு மலைமண்டலப்பெருமாள் மற்றும் ஏகாம்பரேசுவரர் திருக்கோயில், சதுரங்கப்பட்டினம் - 603102, செங்கல்பட்டு .
Arulmigu Malaimandala Perumal Temple And Arulmigu Eagambareswarar Temple, Sadhurangapattinam - 603102, Chengalpattu District [TM001720]
×
Temple History

தல வரலாறு

மலையே இல்லாத இடத்தில் மலைபோல் படிபடியாக உயர்த்தி கட்டப்பட்ட மலைமீது ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் நின்ற கோலத்தில் சுமார் 6அடி உயரத்தில் மூலவர் சேவை சாதிக்கிறார். மாமல்லபுரத்தில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற அருள்மிகு ஸ்தலயசயனப்பெருமாள் திருக்கோயிலின் அபிமான ஸ்தலமாகும். இத்திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்கள் காஞ்சிபுரம் சென்று தேவராஜ பெருமாளையும், காமாட்சியையும் வழிப்பட்டு வந்துள்ளார்கள், பின்னாலில் சதுரங்கப்பட்டினத்தில் சொந்த செலவில் மலை மண்டல பெருமாளுக்கும் காமாட்சி அம்மனுக்கும் தனித்தனியாக திருக்கோயில் அமைத்து வழிப்பட்டு வந்துள்ளார்கள். சிறப்பு அம்சம் இத்திருக்கோயிலில் பெருமாள் சன்னதிக்கு முன்பு பெருமாள் பாதத்தில் அஷ்டநாக முத்திரையுடன் கருடாழ்வார் அருள்பாலிக்கிறார். நாக தோஷம் நீங்கும் பரிகாரஸ்தலமாகும். ஸ்ரீ விஷ்ணு துர்கைஅமைந்திருப்பது மேலும் சிறப்பு ஆகும். தாயார்...